உள்ளூர் செய்திகள்

தீபாவளி கொண்டாட்டம் ஏன்?

ஒளியின் சிறப்பை உணர்த்துவது தீபாவளி. தீபங்களின் வரிசை என்பதே 'தீபாவளி'. வெளியுலகத்திலுள்ள இருள் மட்டுமில்லாமல், மனதில் இருக்கும் தீமை என்னும் அக இருளும் நீங்க தீபாவளி வழிகாட்டுகிறது.புத்தாடை, பலகாரம், பட்டாசு, உறவினர்களைச் சந்திப்பது என வெறும் கொண்டாட்ட நாளாக மட்டுமில்லாமல், தன்னைப் போல பிறரை நேசிக்கும் அன்பு மனம் நமக்கு வேண்டும் என்பதை உணர்த்துகிறது.எளியவர்களுக்கு இயன்ற உதவி செய்யும் நன்னாளாக அமைந்துள்ளது.