உள்ளூர் செய்திகள்

சொக்கப்பனை கொளுத்துவது ஏன்

திருக்கார்த்திகையன்று பனை, தென்னை ஓலைகளைக் கட்டாகக் கட்டி எரிப்பர். ஒளி வடிவில் கடவுளை தரிசிப்பதே இதன் நோக்கம். எல்லா கோயில்களிலும் இரவில் சொக்கப்பனை கொளுத்துவர். பனை மரத்தை நட்டு அதைச் சுற்றிலும் ஓலை கட்டுவர். அங்கு சிவபார்வதியை எழுந்தருளச் செய்வர். தீபாராதனை காட்டிய பின் பனை ஓலையில் பற்ற வைப்பார்.தீ கொளுந்து விட்டு எரியும். மக்களும் கையில் கொண்டு வந்த ஓலைகளை தீயில் இட்டு வழிபடுவர்.