உள்ளூர் செய்திகள்

மத்தவங்க திருப்திக்காக நீங்க கஷ்டப்படலாம்!

மனசு ஏதோ ஒன்றில் ஆசைப்பட்டு விட்டால், நமக்குக் கிடைக்கும் திருப்திக்காக, பிறத்தியார் என்ன கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணம் வந்துவிடுகிறது. நமக்கு வாய்க்கு ருசியாக ஒன்று வேண்டும் என்பதற்காக, வயசான தாயார் கல்லுரலைக் கட்டிக் கொண்டு மன்றாடினாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது. இப்படி எத்தனையோ கஷ்டங்களுக்கு கொடுமைகளுக்கு பிறரை ஆட்படுத்தி நம் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள நினைக்கிறோம். தன்னுடைய ஆசையினால் மற்றவருக்கு இழைக்கும் துன்பங்கள் ஒருவனைச் சும்மா விடுவதில்லை. அவை எல்லாம் அவனுடைய பாபக்கணக்கில் ஏறி ஒட்டிக்கு இரட்டியாக அவனை நரகலோகத்திலும், மறு ஜன்மாக்களிலும் பழிவாங்கத்தான் செய்யும்.பொதுஜனசேவை, பரோபகாரம் என்று செய்கிறோமே, இதன் தாத்பர்யம் என்ன? நம்மைக் கஷ்டப்படுத்திக் கொண்டாவது பிறருக்கு மகிழ்ச்சி உண்டாக்க வேண்டும் என்பது தான். ஆனால், இந்த சேவையாலும் பிறத்தியாருக்கு திருப்தியைத் தருவதை விட, நமக்கே திருப்தி உண்டாக்கிக் கொள்கிறது தான் உள்ளூர நம்மை அறியாமலே நமக்கு முக்கியமாகி விடுகிறது. விரும்புகிறார் காஞ்சிப்பெரியவர்