மலர்ந்த முகமே இன்பம்
UPDATED : ஜன 21, 2016 | ADDED : ஜன 21, 2016
* மலர்ந்த முகமும் இனிய சொல்லும் இன்பமாக இருப்பதற்கு வழி வகுக்கும்.* அச்சம் இருக்கும் வரை அறிவாளியாக முடியாது. அச்சமின்மையே அறிவு.* உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால் வாக்கிலும் அதன் தன்மை வெளிப்படத் தொடங்கும்.* புகழும் நல்ல அறமும் தவிர மற்ற உலக விஷயம் அத்தனையும் பொய்யானதே.* மற்றவர் உள்ளத்தில் பொய் மதிப்பு உண்டாக இடம் கொடுப்பது கூடாது.* மனிதன் கற்கும் முயற்சியிலும் தவவாழ்விலும் எந்த வயதிலும் ஈடுபடலாம். -பாரதியார்