தனக்குத் தானே நண்பன்
UPDATED : ஜன 21, 2015 | ADDED : ஜன 21, 2015
* ஒருவன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகமே அவனிடம் நட்பு கொள்ள விரும்பும்.* உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் கால்கள் நேரான பாதையில் செல்லத் தொடங்கும்.* உலகில் எல்லாம் தெய்வத்தின் விருப்பப்படியே நடக்கிறது. நம் இஷ்டப்படி எதுவும் நடப்பது இல்லை.* எந்த தொழிலில் ஈடுபட்டாலும் சிறப்பானது தான். சோம்பலுடன் திரிவது ஒன்றே இழிவானது.* முயற்சியில் குறையும், தவறும் நேர்வது மனித இயல்பே. இதற்காக கவலைப்பட தேவையில்லை.- பாரதியார்