உள்ளூர் செய்திகள்

நீங்கள் உத்தமர் தானா?

* உழைத்து வாழ்வதில் தான் பெருமை இருக்கிறது. வேலை எதுவும் செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்குச் சமம்.* தன்மானத்தை இழந்தவனே பிறரிடம் பிச்சை ஏற்பான். மான உணர்வு, புத்திபலம் மிக்கவனால் பிறரிடம் கைநீட்டி யாசகம் கேட்க முடியாது. * பெற்றோர் தேடிய பணத்தில் தாராளமாய்ச் செலவு செய்வதை விட, தானே பாடுபட்டுத் தேடிய பணத்தில் செலவழிப்பவனே உத்தமன்.* செயல்படாமல் கை கட்டி உட்கார்ந்திருப்பவனை யாரும் விரும்புவதில்லை. வேலையின்றி வெறுமனே திரிபவனைப் பார்ப்பதே பாவம்.* நம் எல்லோருக்கும் எத்தனையோ கடமைகள் இருக்கின்றன. இதில் பிறந்த மண்ணான இந்த நாட்டுக்கு உழைப்பதே நம்முடைய முக்கியமான கடமை.* தான், தன்குடும்பம், பிறந்த இந்த நாடு என எல்லோருக்கும் பயனுள்ள வகையில் ஏதாவது ஒரு தொழிலைச் செய்து நாம் வாழ வேண்டும்.- பாரதியார்