பெற்றோரை விடச் சிறந்தது
UPDATED : மார் 25, 2012 | ADDED : மார் 25, 2012
* அதர்மத்தை அழிப்பதைக் காட்டிலும், அறியாமையைப் போக்குவதற்கு அதிக பலம் வேண்டும். * மனதைக் கட்டுப்படுத்தி நல்வழியில் நிறுத்தினால், தாயும் தந்தையும் செய்வதை விட அதிகமான நன்மைகளை மனம் செய்யும்.* ஒன்றை அடக்கும் முன் அதன் இயல்பை அறிந்து கொள்ளுதல் வேண்டும். அறியாத ஒன்றை நம்மால் வசப்படுத்த முடியாது. எண்ணங்களை தொடர்ந்து கவனித்து வந்தால், மனம் அடங்கிவிடும்.* நம் மனமே நமக்கு எதிரி. மனதை வென்றவன் தனக்குத் தானே நண்பனாகி விடுவான். * கவலை என்னும் அசுரர்களை இடைவிடாது பெற்றுத் தள்ளும் தாயாக மனம் இருக்கக் கூடாது. நல்லவர்களோடு பழகுதல், நல்ல மனப்பயிற்சிகளாலும் மனம் செம்மை பெறும். * காவல் அரண் போல மனம் திகழ வேண்டுமானால், விவேகம் என்னும் வாளை ஏந்திக் கொள்ளுங்கள். அகப்பகைவர்களை ஒரே வெட்டில் பொடிப் பொடியாகச் செய்துவிடும் தன்மை அதற்கு உண்டு.- பாரதியார்