அன்பே சாந்தி நிலையம்
UPDATED : மார் 11, 2015 | ADDED : மார் 11, 2015
*பொதுநலத்துடன் செயல்படுங்கள். நியாய வழியில் செல்லுங்கள். எல்லா இன்பங்களையும் பெறுவீர்கள்.* எப்போதும் உழைத்துக் கொண்டிருங்கள். வறுமை என்னும் பேய் உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.* கடவுள் அறிவுக்கடலாக இருக்கிறார். அக்கடலில் மனிதன் ஒரு திவலையாக இருக்கிறான். * பொறுமை இருந்தால், செயல்பாடுகளில் வெற்றி பெறுவது எளிதானது.* அன்பு எதையும் பொறுத்துக் கொள்ளும். அன்பிருக்கும் இடமே சாந்தி நிலையமாக இருக்கும்.பாரதியார்