காலத்தை வீணாக்காதீர்!
* ஒருவன் தன் மனமறிந்து உண்மை வழியில் வாழ முயல வேண்டும். இல்லாவிட்டால், அவமானமும், பாவமும் உண்டாவதை யாரும் தவிர்க்க முடியாது.* வாய்ப்பேச்சு ஒருவிதமாகவும், செயல் வேறொரு விதமாகவும் உடையவர்களின் நட்பை கனவில் கூட ஏற்பது கூடாது.* உலகமே செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் ஆகிய மூவகையான சக்தியே இந்த உலகத்தை ஆள்கிறது. இதையே இச்சா, கிரியா, ஞானசக்தி என சாஸ்திரம் சொல்கிறது.* 'காலம் பணவிலை உடையது' என்ற ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. நேரத்தை ஒருபோதும் வீணாக கழிப்பது கூடாது. * இன்று செய்ய வேண்டிய வேலையை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தாமதப்படுத்தினால், அந்த செயல் நடக்காமல் போவதற்கும் கூட வாய்ப்பு இருக்கிறது.* எந்தச் செயலும் மனதில் தோன்றிய உடனே ஆயத்தப்பணிகளில் இறங்கி விட வேண்டும். தள்ளிப் போடுவதால் மனதில் உற்சாகம் குறையத் தொடங்கும்.- பாரதியார்