விண்ணிலும் நீடூழி வாழலாம்
UPDATED : ஏப் 09, 2013 | ADDED : ஏப் 09, 2013
* எதற்கும் யாருக்கும் பயப்படாதீர்கள். நெஞ்சிலுள்ள பயத்தை விரட்டி விட்டால், உச்சியில் வானமே விழுந்தாலும் கவலைஇல்லை. * எந்த உயிருக்கு துன்பம் இழைத்தாலும் அது கடவுளுக்கு செய்யும் துன்பமே ஆகும். எந்த உயிருக்கு உதவி செய்தாலும் அதுவும் அவரையே சேரும். * 'எல்லாம் பிரம்ம மயம்' 'சர்வம் விஷ்ணுமயம் ஜகத்' என்பவை உலகம் கடவுளின் வடிவம் என்ற உண்மையை உணர்த்துகின்றன.* எல்லாம் கடவுள் மயம் என்பதை உணர்ந்தவன், யாருக்கும் எதற்கும் பயப்படாமல் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பான். * உண்மை, நேர்மை, வீரம், பக்தி, உயிர்க்கருணை போன்ற குணங்களைப் பின்பற்றும் நல்லவர்கள் இந்த மண்ணில் மட்டுமின்றி தேவர்களாக விண்ணிலும் நீடூழி வாழ்வார்கள். * சமயத்தின் பெயரால் ஒருவரை ஒருவரை வெறுக்காதீர். எந்த உருவத்தில் வழிபட்டாலும் வழிபடுவது ஒரே கடவுளைத் தான்.- பாரதியார்