உதவிக்கரம் நீட்டுங்கள்
UPDATED : ஏப் 21, 2014 | ADDED : ஏப் 21, 2014
* தெய்வம் எப்போதும் நம் மீது அருளைப் பொழிந்து கொண்டிருக்கிறது. அதனால் உள்ளத்தை திறந்து வையுங்கள்.* எல்லாம் அளிக்கும் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்று சொல்லுங்கள். துன்பம் அனைத்தும் நீங்கும்.* அகமும், புறமும் எப்போதும் மாசில்லாமல் தூய்மையுடன் இருக்கப் பழகுங்கள்.* ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு தான். செல்வந்தர் செய்யும் அநியாயத்திற்கு அளவில்லை.* உதவும் மனப்பான்மை இல்லாத இடத்தில், தெய்வ பக்தி என்பது வேஷம் போடவே பயன்படும்.- பாரதியார்