உள்ளூர் செய்திகள்

நம்பிக்கையே வெற்றி

* நம்பிக்கை இருக்குமிடத்தை வெற்றி நாடி வரும். விடாமுயற்சியே நம்பிக்கையின் லட்சணம்.* பயம், சந்தேகம், சோம்பல் போன்ற தீய குணங்கள் வெற்றி வாய்ப்பைப் பின்னுக்குத் தள்ளும் உட்பகைவர்கள்.* செயல் நிறைவேறாமல் தடை பல குறுக்கிட்டாலும், அசையாத நம்பிக்கை அவற்றை தகர்க்கும்.* ஆகாய கங்கையை பூமிக்கு வரவழைத்த பகீரதனின் வரலாறு காட்டும் உட்கருத்தை மறப்பது கூடாது.* நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பு. நம்பிக்கை கொண்டவனே மனிதர்களில் சிறந்தவன்.- பாரதியார்