உள்ளூர் செய்திகள்

வேண்டியதை மட்டும் கொடு!

<P>* இறைவன், இறைவி இரண்டு தத்துவங்களும் ஒன்றாகி தாயும் தந்தையுமாய், சக்தியும் சிவனுமாய் என் உள்ளத்தில் ஒளியாக நின்று உலகம் எங்கும் நிறைந்து நிற்கும் பரம்பொருளே! எல்லாவற்றுக்கும் ஆதாரமாக நிற்கும் ஆதிமூலமே! அனைத்தையும் காக்கும் தேவதேவா! சிவனே! கண்ணா! வேலா! சாத்தா! விநாயகா! மாடா! இருளா! சூரியா! இந்துவே! சக்தியே! வாணீ! காளி! மாமகளே! ஆணாய், பெண்ணாய், அலியாய் இருப்பவனே! உள்ளவை யாவுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே! வேதச்சுடரே! சத்தியமாய் விளங்கும் கடவுளே! உன்னிடத்தில் 'அபயம் அபயம்' என்று அடைக்கலம் கேட்கிறேன். <BR>* இறைவா! என்னை நோயிலிருந்து காப்பாய். நூறாண்டு வாழச் செய்வாய். அச்சத்தை அகற்றுவாய். அமைதியை நாளும் அருள்வாய். எனக்கென உடைமை ஒன்றும் வேண்டாம். ஆனால், உன் துணை மட்டும் வேண்டும். வேண்டாதது அனைத்தையும் நீக்கி எனக்கு வேண்டியது அனைத்தையும் அருள்வது உன் கடன்.<BR>* ஒளிமிக்க சுடரே! கணங்களின், தேவர்களின் தலைவனே! என் இடர் அத்தனையையும் களைந்தருள்வாய். வான்வெளியில் பல்கோடிக் கோடியாக படர்ந்திருக்கும் அண்டங்கள் யாவினையும் படைத்தவனே! இறைவனே! நீ எப்போதும் என் நெஞ்சில் வாழ்வாயாக.</P>