சாதிப்பது எப்படி?
UPDATED : பிப் 12, 2016 | ADDED : பிப் 12, 2016
*எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவே வேராக இருக்கிறது. அறிவுக் கண் திறந்தால் எதையும் சாதிக்கலாம்.* மனதில் உறுதி, நம்பிக்கை, உற்சாகம் ஆகிய நற்பண்புகள் நிறைந்திருப்பவன் நோய்க்கு ஆளாக மாட்டான்.* அன்பு ஒன்றினால் மட்டுமே உலகத்தின் துயரம் அனைத்தையும் எளிதில் மாற்றி அமைக்க முடியும்.* பொருள் படைத்தவன் சமத்துவ எண்ணத்தைப் பெற்று விட்டால் உலகமே சீர் பெற்று விடும்.* சோம்பேறியாக வாழ்வது பெருங்குற்றம். பிறரிடம் கையேந்துபவனே சோம்பலுக்கு இடம் கொடுப்பான்.-பாரதியார்