மனதில் உற்சாகம் நிலைக்கட்டும்
* தெய்வம் இருப்பது அறிவு மயம். அந்த அறிவுக்கடலில் நான் என்பது ஒரு திவலை. அதற்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பை அகங்காரம் என்ற மாசு மூடியிருக்கிறது. இந்த அகங்காரத்தை நீக்கிவிட்டால் தெய்வசக்தியும், ஞானமும் உண்டாகும்.* மனதை உற்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பிலே சக்தியுண்டாகும். உடல் சக்தியுடன் தன் பணிகளைச் செய்தால் மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். இவ்விரண்டும் ஒன்றையொன்று சார்ந்ததாக இருக்கிறது. அதனால், ஒருபோதும் மனத் தளர்ச்சிக்கு இடம் கொடுப்பது கூடாது.* நம் அறிவில் தெய்வத்தன்மை இருக்கிறது. நல்ல சிந்தனையை வளர்த்துக் கொண்டு நம் கடமைகளைச் செய்ய வேண்டும். அப்போது தான் நம்முடைய செயல்கள் அனைத்திலும் தெய்வத்தன்மை வெளிப்படத் துவங்கும். * அன்பெனும் கருணை ஊற்று மனிதனிடம் பொங்க வேண்டும். அன்புடன் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் பூரணமாக ஏற்று அருள்புரிகிறார். அன்பு காட்டுதலே சிறந்த அறம் என்ற பேருண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். - பாரதியார்