அறிவுக்கண் திறக்கட்டும்
* மனதில் உறுதியும், வாக்கில் இனிமையும் கலந்திருக்கட்டும். எண்ணத்தில் தூய்மை விளங்கட்டும். செயலில் மேன்மை மிளிரட்டும்.* மனம் நாம் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்டால் இந்த உலகில் பல்லாண்டு வாழலாம். * உண்மை எங்கும் ஓங்கட்டும். அறிவுக்கண் திறக்கட்டும். செய்யும் செயலில் ஆர்வம் பெருகட்டும். பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் பயனுள்ள வாழ்வு பெறட்டும். * மனம் நம் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மனதிற்கு எஜமானனாக இருந்து வழிகாட்ட வேண்டும். அதன்வழியில் சென்றால் சிரமங்களையே சந்திக்க வேண்டியிருக்கும்.* அன்னை பராசக்தியின் திருவடியை வணங்கி, நீதிநெறி தவறாமல் வாழுங்கள். அவளையே தஞ்சமென நினையுங்கள். உழைப்பில் கவனம் வையுங்கள். * பூட்டைத் திறக்கும் சாவி போல, நல்ல அறிவால் மனம் என்னும் வீட்டைத் திறந்திடுங்கள். அதில் சத்தியத்தை குடியமர்த்தி நல்வாழ்வு பெறுங்கள். - பாரதியார்