நீதி வழி நடப்போம்
UPDATED : செப் 29, 2013 | ADDED : செப் 29, 2013
* மக்களை ஜாதியின் அடிப்படையில் மேலோர், கீழோர் என்று பிரிப்பது கூடாது. நீதிவழி நடப்பவர், பிறருக்கு உதவும் நல்லவர், நேர்மை மிக்கவர் மேலோர். மற்ற அனைவரும் கீழோர்.* உழைப்பதில் விருப்பம் கொள்ளுங்கள். அதில் தான் சுகமிருக்கிறது. வறுமையும், நோயும் உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.* நீண்ட ஆயுள், நோயில்லாமை, அறிவு, செல்வம் ஆகியவை மனிதனுக்கு தேவை. இவற்றை அருளும்படி தெய்வத்தை மன்றாடி வேண்டுங்கள்.* அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று நிலையிலும் நேர்வழியில் நடந்து தெய்வ ஒளியைக் காண வேண்டும். * தெய்வம் அறிவுமயமாக இருக்கிறது. அந்த அறிவுக்கடலில் ஒரு திவலையாக நாம் இருக்கிறோம். ஆனால், அகங்காரம் என்ற மாசு மூடியிருக்கிறது. அந்த மாசு நீங்கி விட்டால் தெய்வ சக்தியைப் பெறலாம்.- பாரதியார்