அன்பு மயமாக்குவோம்

* வெற்றி எட்டுத்திசைகளிலும் பரவும் படியாக முரசே கொட்டுவோம். வேதம் என்றும் நிலைத்து வாழ்க என்று முரசு கொட்டுவோம். நெற்றிக் கண் கொண்ட ஈசனோடு நடனமிடும் சக்திதாயின் புகழ் பரவ முரசு கொட்டுவோம்.
* ஊருக்கு நல்லது சொல்வேன். எனக்கு உண்மை தெரிந்து சொல்வேன்.சீரும் சிறப்பும் தந்து இவ்வுலகிற்கு முதன்மையாக விளங்கும் தெய்வத்தின் துணை எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
* வேதம் அறிந்தவர்களும், கல்விஅறிவில் சிறந்தவர்களும் மேலோர்கள். நீதி தவறாமல் நியமப்படி ஆட்சி செய்பவர்கள் ஆட்சியாளர்கள். பல தொழில் புரிந்து வியாபாரம் செய்பவர்கள் வணிகர்கள். இன்னும் தொண்டு செய்து வாழும் மக்களும் இருக்கிறார்கள். இந்நால்வகைப் பகுப்பாலே உலகம் இயங்குகிறது.
* குடும்பத்தில் தந்தையும், தாயும், பிள்ளைகளும் போல மேலோர்கள், ஆட்சியாளர்கள், வணிகர்கள், தொண்டர்கள் ஆகிய நால்வகை மக்களும் ஒரு குலத்தவர்களே. இதில் உயர்வும் தாழ்வும் இல்லை.
* ஒருவருக்கொருவர் ஆதரவு காட்டி பண்போடு வாழ்வோம். தொழில்கள் பலவும் உலகில் நடைபெற துணை நிற்போம். உலகை அன்பு மயமாக்குவோம். அன்புணர்வாலே இவ்வுலகம் வளம் பெறும்.
பாரதியார்