உள்ளூர் செய்திகள்

பழகலாம் வாருங்கள்!

* எந்த செயல் நிறைவேற வேண்டுமானாலும், அதற்கு காலம் ஒத்துழைக்க வேண்டும். * குடும்ப வாழ்க்கையே மற்றெந்த வாழ்க்கையையும் விடச் சிறந்தது. * எந்த தொழிலையும் கற்க முடியாது என்று கைவிடுதல் கூடாது. திறமை உடையவனிடம் அதைப் பழகிக் கொள்ள முன்வர வேண்டும். * உடல் நோயுற்ற காலத்தில் கவலைப்பட வேண்டாம். அதனால், நோயின் தீவிரம் அதிகமாகி விடும். * அழகு, செல்வம், கல்வி, உடல் வலிமை இவற்றை எண்ணி யாரும் கர்வப்படுதல் கூடாது. -பாரதியார்