உள்ளூர் செய்திகள்

மனதில் நல்லருள் நிரம்பட்டும்

* அச்சம், கவலை, சிறுமை, திகைப்பு, சோர்வு முதலான எத்தனையோ அசுரர்கள் நமக்குள்ளே இருக்கிறார்கள். அவர்களை ஒழித்துக்கட்டுவோம்.* சீறி வரும் பாம்பைக் கண்டாலும் அஞ்சாமல் சிரிக்கவல்ல தீரர்களே கடவுளின் கருணையைப் பெற்றவர்கள் ஆவர். * அறியாமை என்னும் விஷப்பூச்சி நமக்குள் புகுந்து ஒளியையும், இன்பத்தையும் மறைக்கும்.* மதிப்புடன் வாழும் மனிதனுக்கு நேரும் அபகீர்த்தி என்னும் கெட்ட பெயர் மரணத்தைக் காட்டிலும் கொடுமையானது.* மனக்கவலையைக் கொல்லுங்கள். அனைவரும் வாருங்கள். உள்ளத்தில் இருக்கும் அதிருப்தியைக் கொத்துங்கள். கொல்லுங்கள்.* இந்தப் பூமியில் யாருக்கும் யாரும் இனி அடிமை இல்லை. பரிபூரணமான இறைவன் ஒருவனுக்கே அடிமை செய்து வாழ்வோம். * நெஞ்சில் ஈரம் இல்லாத மனிதர்கள் இறைவனைக் காண முடியாது. எப்போதும் மனதில் நல்லருளை நிரப்பிக் கொள்ளுங்கள்.- பாரதியார்