வளமும் புகழும் கிடைக்கட்டும்
* அறிவின் உருவமாய் ஒளிர்கின்ற கண்ணா! என் உயிரை அழியாமல் பாதுகாப்பாய். என்னுள்ளே கருவினைப் போல் வளர்ந்து அருள்செய்பவனே! தாமரையில் வீற்றிருக்கும் திருமகளோடு இருப்பவனே! திருமகளிடம் இணைந்திருப்பது போல என் உயிரோடு இரண்டறக் கலப்பாயாக.* என் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டவனே! இவ்வுலகம் அழியும் காலத்தில் அசுரர்களின் தலைகள் சிதறும்படியாகச் செய்து எங்களைக் காப்பாற்று.* தேவர்கள் வணங்கும் பெருமானே! உன்னைத் துணையாகப் போற்றி வழிபடுகிறேன். கடலில் இருந்து எழுகின்ற சூரியனைப் போல, என் உள்ளக்கடலில் இருந்து நீ எழுந்து வர வேண்டும். * கரியவண்ணம் கொண்டவனே! உன் திருவடியைப் போற்றிடும் என் உள்ளம் அழியாத பேரின்பத்தினை பெறட்டும். வளமும், செல்வமும், பெருமையும், புகழும் உன்னருளால் எனக்கு கிடைக்கட்டும்.* உனது பெருமைகளைப் பாடினால் தீமை சிதைந்து பெருநன்மை விளையும். நிலமகளின் தலைவனாகிய கண்ணனே! உன் புகழை என் மனம் என்றும் பாடிக்கொண்டிருக்கும். * கண்ணா! காக்கை சிறகினில் உன் கரிய நிறத்தைக் கண்டேன், பார்க்கும் பச்சை மரங்களில் உன் பசுமை நிறத்தை கண்டேன்.- பாரதியார்