உள்ளூர் செய்திகள்

நம்ம வீட்டு தெய்வம்

*புராணங்களைக் கேட்டுப் பயன்அடையலாம். ஆனால், அவற்றை வேதங்களாக நினைத்து, அறியாமையாக பேசி விலங்குகள் போல் நடக்கக் கூடாது.* பயத்தை வென்றால் மற்ற பாவங்களை வெல்லுதல் எளிதாகி விடும். மற்ற பாவங்களை வென்றால், தாய் பாவமாகிய பயத்தை வெல்லுதல் எளிதாகிவிடும்.* குழந்தை தாயை நம்புவது போலவும், பார்ப்பதை கண் நம்புவது போலவும், உன்னையே நீ நம்புவது போலவும் தெய்வத்தையும் நம்ப வேண்டும்.* மனிதன் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டு என்றும் மாறாத பேரின்பத்தை அனுபவிக்க விரும்புகிறான், அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது.* மனிதனுக்கு மனிதன் விரோதி என்ற நிலையை மாற்றி, அன்பை மூலாதாரமாக்க வேண்டும்.* சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற, எண்ணங்களை மனதில் நிறுத்திக் கொண்டால் உடம்பில் தெய்வத்தன்மை விளங்கும்.* சொந்த வீட்டில் தெய்வத்தைக் காணும் திறமை இல்லாதவன், மலைச் சிகரம் உட்பட எந்த இடத்திலும் கடவுளைக் காணமாட்டான்.- பாரதியார்