உள்ளூர் செய்திகள்

உலகை இயக்கும் பராசக்தி

* இறைவனை இயற்கை என்றும், தூய அறிவு என்றும், அன்பே சிவம் என்றும், சிவசக்தி என்றும் சொல்கின்றனர். எப்படி அழைத்தாலும் கடவுள் ஒருவரே. * இறைவனைத் தாயாகவும், தந்தையாகவும், எஜமானனாகவும், குருவாகவும், தோழனாகவும் நினைத்து வழிபடலாம். அவரை நமது உறவினராக எண்ணி வழிபடும்போது, எளிதில் அருள் கிடைக்கும். * அச்சம், துன்பம் ஆகியவை எப்போதும் நம்மைத் தாக்க காத்திருக்கின்றன. சிவசக்தியை வணங்கினால் இவற்றிடம் இருந்து விடுதலை பெறலாம். அவளை என்றும் மறவாதீர்.*அன்னை ஆதிபராசக்தியே அனைத்து உயிர்களாகவும், உலகமாகவும் விளங்குகிறாள். அவளது அருள் இல்லாமல் உலகில் எச்செயலும் நடப்பதில்லை. அவளது அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். * அன்னை பராசக்தி பஞ்சபூதங்களை அடக்கி உலகத்தை இயக்குகிறாள். அவளது திருப்பாதங்களில் சரணடைபவர்கள் சகல வெற்றியும் பெறுவர். - பாரதியார்