வெற்றி பெற விடாமுயற்சி
* எந்தச் செயலிலும் ஊக்கத்துடன் ஈடுபட்டால், அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு முடிவை இறைவன் காண்பிப்பார்.* இறைவனை நம்பு, உண்மை பேசு, நியாயத்தை எப்போதும் செய், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.* இறைவனுக்கு உள்ளத்தை அர்ப்பணிப்பது யாகம். யாகத்தை நடத்துபவருக்கு தெய்வ வலிமை, செல்வம், ஆயுள், புகழ் அனைத்து நன்மையையும் இறைவன் அளிப்பார்.* அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும் வெல்ல வேண்டும். தர்மத்தாலும் கருணையாலும் கிடைக்கும் வெற்றியே நிலையானது.* நம்பிக்கையை நெஞ்சில் நிறுத்திக் கொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நம்பிக்கை உண்டானால் வெற்றியுண்டு, நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சி. இதை வாழ்வின் தாரக மந்திரமாக்குங்கள்.* பக்தி பக்குவம் அடைந்த பிறகு, இறைவனிடம் கேட்ட வரம் உடனே கிடைக்கும். அவ்வாறு பக்குவமடைய பக்தி மார்க்கத்தில் மனதை தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும்.- பாரதியார்