முப்பெரும் தேவியர் ஸ்தோத்திரம்

* பராசக்தி நீயே! இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறாய். அகில உலகம் அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்பவளே! உன்னையன்றி, எனக்கு ஆதரவு தருபவர் யார் இருக்கிறார்கள்? ஏதாவது வழிகாட்டி என்னைக் கடைத்தேறச் செய்வாய். வேதங்கள் போற்றும் தாயே! உன் திருவடிகளைப் பணிந்து போற்றுகிறேன்.
* என் உயிர் போன்றவளே! தாயே! கலைவாணியே! கலைகளுக்கு எல்லாம் தலைவியாக இருப்பவளே! ஆணிமுத்தினைப் போன்று அறிவிøனையே மாலையாக்கிச் சூடியிருப்பவளே! காணுகின்ற காட்சியெல்லாம் நிறைந்திருப்பவளே! உன் மலரடிகளைப் பணிந்தேன்.
* பொன்போன்று ஒளிர்பவளே! நாராயண மூர்த்தியின் துணைவியே! புகழின் உச்சியே! மின்னும் நவரத்தினம் போன்று மேனி அழகுள்ளவளே! அன்னையாக இருந்து உலகத்தை ஆதரிப்பவளே! திருமகளாகிய லட்சுமியே! உன் பொற்பாதங்களைச் சரணடைகிறேன்.
* மலையிலே பிறந்தவளே! சங்கரனாரை மணந்தவளே! உலகத்தின் ஆதாரமே! அன்பர்களை ஆதரித்து உயர்வாழ்வு அருள்பவளே! உன் தாமரைப் பாதங்களை எங்கள் தலைமேல் தாங்கி வாழ்வதே பிறவிப்பயனாகும்.
-பாரதியார்