தைரியமாக சிரியுங்கள்
UPDATED : டிச 20, 2013 | ADDED : டிச 20, 2013
* கருணை இல்லாவிட்டால் கடவுளின் அருளைப்பெற முடியாது. எல்லா உயிர்களும் கடவுளின் குழந்தைகள் என்பதால், எல்லார் மீதும் கருணை காட்டுவோம்.* பூமியில் யாருக்கும் யாரும் அடிமை இல்லை. பரிபூரணமான கடவுள் ஒருவருக்கே நாம் எல்லாரும் அடிமை.* கவலையின்றி வாழ்வோம். உள்ளத்தில் இருக்கும் அதிருப்தி எண்ணங்களைக் கைவிடுவோம். * சீறி வரும் பாம்பைக் கண்டாலும் தைரியமாக சிரிப்பவனே, கடவுளின் கருணையைப் பெறுவான். - பாரதியார்