உள்ளூர் செய்திகள்

இன்றே செய்தால் சிறப்பு

* வாழ்வில் எப்போதும், எந்த விஷயத்திலும் சமாதானம், சகிப்புத்தன்மையைக் கடைபிடிப்பதை நம் லட்சியமாகக் கொள்ள வேண்டும்.* தன்னை மறந்து தெய்வத்தை முழுமையாக நம்பினால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து இன்பங்களையும் பெற்று மகிழலாம்.* தியானம் உணவை விட இன்றியமையாதது. அமைதியான சிந்தனைகளை மனதில் நிரப்பிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுங்கள். * சோம்பேறியாய் இருப்பது பெருங்குற்றம். பிச்சை எடுப்பவர்களில் பலரும் சோம்பேறியாகவே இருக்கின்றனர். * உண்மையான பக்தியிருந்தால் தைரியம் உண்டாகும். தைரியம் இருந்தால் உண்øமான பக்தி ஏற்படும்.* எந்த செயலையும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று பொழுதைக் கடத்தாமல், இன்றே செய்தால் சிறப்பாக முடியும்.* காலம் மதிப்பு மிக்கது. அதை வீணாகக் கழித்தால் அதற்கான நன்மை கிடைக்காமலே போய்விடும். - பாரதியார்