பள்ளிகளில் ஆன்மிகப்பாடம்
* அதர்மம் தர்மத்திற்கு உணவு. தர்மம் இருக்கும் வரை அதர்மமும் இருக்கும். நியாயமே, அதர்மம் முற்றிலும் அழிந்து போனால் தர்மம் உண்ண உணவில்லாமல் தானும் மடிந்துவிடும்.* மாமிச உணவு மனிதன் தனது உடல் இறைச்சியையே தின்பது போலாகும். மற்றவர்களைப் பகைத்தலும், அவர்களைக் கொல்வதும் போன்றதாகும்.* ஒரு நாட்டில் அனைத்துவிதமான குறைகளுக்கும் புத்திக் குறைவே ஆதாரம். அது படிப்புக் குறைவினால் உண்டாகிறது. இந்தக் குறையை நீக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.* நமது முதலாவது கடமை நம்கல்வி நிறுவனங்களில் பாரத கண்டத்தின் புராதன மகாத்மாக்களைப்பற்றி எடுத்துரைக்கும் ஆன்மிகப் பயிற்சி அளித்து இளைஞர்களுக்குத் தேசபக்தி, சவுகரியம், ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும்.* பெண் கல்வி தேவை என்று மனதால் நினைத்தும், வாயால் பேசிக் கொண்டு இருப்பது அறியாமையாகும். பெண்களின் உதவியின்றி ஒரு தேசம் எந்தவித முன்னேற்றமும் அடைய முடியாது.* இயற்கை விதியை அனுசரித்து வாழ்ந்தால் எந்த தீமையும் ஏற்படாது. அதுவே பரம மெய்ஞானமாகும்.-பாரதியார்