வெற்றி பெற ஒழுக்கம் தேவை

* திருவாகிய லட்சுமியை வணங்கி, நாள்தோறும் நேர்மையான வழியில் அவரவர் தொழிலைச் செய்து நன்மைகளைப் பெற்று மகிழ்வோம். செயல் வெற்றி பெற வேண்டுமானால் வாழ்வில் ஒழுக்கம் வேண்டும் என்ற உண்மையை அறிந்தபின்னும் வீண் கவலைகள் நமக்கு எதற்கு?
* துன்பமும், சோர்வும், வீண்பயமும் அன்பில் மட்டுமே அழியும் தன்மையுடையவை. அன்பு என்றுமே அழிவில்லாதது. ஞாயிறாகிய சூரியனைப் போல, நடுநிலையில் நின்று இப்பூவுலகில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வோம்.
* தூய பெருங்கனலாகிய நெற்றிக்கண்ணிலிருந்து அவதரித்த சுப்பிரமணியக்கடவுளை ஒழுக்கத்துடன் பணிந்து போற்றினால் நம்மை ஒருபோதும் துன்பம் நெருங்குவதில்லை.
* வடிவேல் முருகப்பெருமானின் திருவடிகளைப் பணிந்து போற்றுவோம். சுற்றி நில்லாது ஓடிவிடு பகையே! வேலாயுதம் துள்ளிக் கொண்டு வருகிறது. சுருதிகளின் பொருளாக திகழ்பவனே! கவலைகளைக் கடல்கடத்தும் ஞானபண்டிதனே! உன் அடியார்களை காத்தருள்வாய்.
* அமரர்கள் வாழ்வு பெற வந்த வேலவா உன் திருவடிகளே சரணம் சரணம். உள்ள உடல் பிணியாவும் சிதறி ஓடும்படியாக, ஒளிபொருந்திய வேலாயுதத்தை ஏந்தி நிற்கும் முருகப்பெருமானையே சரணடைகிறேன்.
-பாரதியார்