உள்ளூர் செய்திகள்

வானம் கூட வசப்படும்

* நம் விருப்பத்திற்கேற்ப எல்லாம் நடப்பது இல்லை. கடவுளின் விருப்பமே எந்த விஷயத்திலும் இறுதியானது.* அறியாமையில் சிக்கினால் மனம் தடுமாறும். விழிப்புடன் செயல்பட்டால் மனதை வெல்லலாம்.* மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகமே அவனுக்கு நட்பாகி விடும்.* உள்ளத்தில் நேர்மையும், செயலில் துணிவும் இருந்தால் வானம் கூட ஒருவனுக்கு வசப்படும்.* செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு கருத வேண்டாம். சோம்பல் ஒன்றே மிக இழிவானது.- பாரதியார்