அன்பால் அரவணைப்போம்
UPDATED : ஜன 01, 2016 | ADDED : ஜன 01, 2016
* அன்பை விடச் சிறந்தது வேறில்லை. அன்பு உள்ளம் அனைவரையும் அரவணைத்து மகிழும்.*எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவு தான் வேர். அறிவை பயன் படுத்தினால் எதிலும் வெல்லலாம்.* சோம்பலை புறக்கணியுங்கள். உழைப்பின்றி உலகில் எதையும் சாதிக்க முடியாது.* உடல் பலமுடன் இருக்க விரும்பினால், முதலில் மனதை வலிமையாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.* தெய்வம் என்னும் அறிவுக்கடலில் நம் ஒவ்வொருவரும் ஒரு திவலை போல இருக்கிறோம்.-பாரதியார்