உள்ளூர் செய்திகள்

வெற்றி மேல் வெற்றி

* எண்ணெய், தன்னையே எரித்துக் கொண்டுவிளக்கிற்கு ஒளி தருகிறது. நீங்களும் உங்களை பிறர் சேவைக்கு அர்ப்பணியுங்கள். * மற்றவர்கள் உங்கள் மதிப்பை குறைத்துக் கொள்வதற்கு இடம் கொடுக்காதீர்கள்.* கோபம் என்ற இருள் மனதைச் சூழ்ந்து விடாமல் காத்து கொள்ளுங்கள். செய்ய வேண்டிய கடமையிலிருந்து ஒருபோதும் விலகிச் செல்லாதீர்கள். * தர்மத்தைத் தவிர உலகில் உள்ள மற்றதெல்லாம் வெறும் பொய்.* உடல்நிலையைக் கவனிக்காவிட்டால், வாழ்வே துன்பமாகிவிடும். அதனால், ஆரோக்கியத்தைப் பேணுங்கள். உடம்பை வலிமையாக்க வேண்டுமானால், உள்ளமும் வலிமையாக இருக்க வேண்டும்.* தெய்வமே அடைக்கலம் என்று உங்களின் பணிகளை மேற்கொள்ளுங்கள். வாழ்வில் நன்மை காண்பீர்கள்.* மனவலிமை இல்லாதவனின் உள்ளம், குழம்பிய கடலுக்கு ஒப்பாகும்.* தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் இருந்தால் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும்.- பாரதியார்