உள்ளூர் செய்திகள்

பயனறிந்து பணியாற்றுங்கள்

* எந்த சொல் உள்ளத்தில் துணிவை ஏற்படுத்துகிறதோ அதற்கே மதிப்பு அதிகம்.* சோம்பலைப் போக்கும் துணிவே சக்தி. அந்த பராசக்தி நம்மை நல்வழிப்படுத்துவாள்.* மனிதன் பணம் தேடுவதற்குப் பல வழிகளில் முயற்சிப்பது நியாயம் தான். என்றாலும், அவரவர் தகுதிக்கேற்ப முயற்சிக்க வேண்டும்.* செல்வம் என்பது பணம் மட்டுமன்று. அறிவு, ஒழுக்கம், பொருள் ஆகியவையும் செல்வத்தில் அடங்கும்.* செல்வம் ஒருவருக்கொருவர் குறைவு ஏற்படும்போது, மனதில் பொறாமையும், வஞ்சனையும் வெளிப்படும்.* பயனறிந்து பணியாற்றவேண்டும். இல்லாவிட்டால் சங்கீதம் படிக்கப் போன கழுதை போல தொல்லைக்கு ஆளாக நேரிடும்.* தெய்வமே சரணம் என்று இருப்பவர்கள் உள்ளத்திலே சோம்பல் இருக்காது. அவர்கள் எப்போதும் உழைக்க முன்வருவர்.- பாரதியார்