உள்ளூர் செய்திகள்

அனைவரும் ஒரே குலம்

* பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது. அனைவரும் ஒரே குலமே. அனைவரின் உடம்பிலும் ஒரே ரத்தமே ஓடுகிறது.* நல்லெண்ணம், அன்பு, நேர்மை, மனத்துாய்மை, கருணை ஆகிய நற்குணங்களே வாழ்விற்கு அவசியம்.* கோபத்தை அன்பினாலும், தீமையை நன்மையாலும் வெற்றி காண வேண்டும்.* பிறர் மீது நூறு குறை கூட சுமத்தலாம். ஆனால், நம்முடைய ஒரு குறையைப் போக்குவது கடினமானது.* கொடுத்த வாக்கை காப்பாற்றுபவன், மணம் மிக்க மலர் போல பிறருக்கு நன்மை செய்பவன் ஆவான்.-புத்தர்