அன்பாக கட்டளையிடுங்கள்
UPDATED : ஜூன் 29, 2015 | ADDED : ஜூன் 29, 2015
* அதிகாரத்தால் யாரையும் பணிய வைக்க வேண்டாம். அன்பாகச் சொன்னால் எதிர்பார்த்ததை விட பணி சிறக்கும். * அருகில் இருப்போர் மகிழ்ச்சியாக இருந்தால், அதில் பங்கு கொள்ளுங்கள். துன்பத்திலும் இதை கடைபிடியுங்கள். * எதற்காகவும், யாரைப் பற்றியும் வதந்தி பரப்பாதீர்கள். இது மோசமான பின்விளைவை ஏற்படுத்தி விடும். * தீய விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்தாலும் செவி சாய்க்காமல் அங்கிருந்து ஒதுங்கி விடுங்கள். * வீண் பேச்சால் தேவையற்ற சிரமம் வரும் என்பதை உணர்ந்து அதைத் தவிருங்கள். -புத்தர்