நல்லதை சிந்திப்போம்
UPDATED : ஜன 10, 2016 | ADDED : ஜன 10, 2016
* மனம் எதை தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது. அதனால் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.* எடுத்துச் சொல்வது என்பது யாருக்கும் எளிய விஷயமே. சொன்னபடி வாழ்வில் நடந்து காட்டுவதே பெருந்தன்மை.* கடவுளிடம் இருந்து பிரிந்ததால் மண்ணில் பிறவி எடுத்திருக்கிறோம். மீண்டும் நல்லதைச் சிந்தித்து அவரோடு சேர முயற்சிக்க வேண்டும்.* கபடம் சிறிதும் இல்லாத குழந்தை மனம் உள்ளவனாக வாழுங்கள்.-காஞ்சிப்பெரியவர்