உள்ளூர் செய்திகள்

நிம்மதிக்கு எளிய வழி

* பிறரது குறைகளை வெளிப்படுத்தக் கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே பார்க்க வேண்டும். * தேவை அதிகரிக்கத் தொடங்கினால் மனதில் அமைதி இருக்காது. குறைத்துக் கொண்டால் நிம்மதி தேடிவரும்.* எண்ணத்தைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். ஆனால், எண்ணியதை எல்லாம் பேசுவதையாவது குறைக்க முயற்சியுங்கள். * கடவுளின் நாமத்தைச் சொல்வதற்கோ, பக்திப் பாடலைப் பாடுவதற்கோ வெட்கப்படக் கூடாது. கடவுளின் நாமத்தால் பாவம் மறைந்தோடும்.* வாழ்க்கை முறை சாத்வீகமாக இருந்தால், நம்மைச் சுற்றிலும் அமைதி பரவும். குடும்பமும் சமுதாயமும் பயன்பெறும்.* மனதில் ஆயிரம் தீயஎண்ணங்களை வைத்துக் கொண்டு மற்றவருக்கு உபதேசம் செய்வதால் பயன் இல்லை.* 15 நாளைக்கு ஒருமுறையாவது விரதம் இருக்கவேண்டும். மற்ற நாட்களிலும் மிதமாக உண்ணவேண்டும். - காஞ்சிப்பெரியவர்