எடுத்துக்காட்டாக இருங்கள்
* போட்டி இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவு உண்டாகாது. நம்மிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.* மனம் எதை தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாக மாறிவிடும் இயல்புடையது.* எடுத்துச் சொல்வதைக் காட்டிலும் எடுத்துக்காட்டாகத் திகழ்வதில் தான் பெருமை இருக்கிறது. * அலட்சிய மனப்பான்மையோடு எதையும் செய்வது கூடாது. சிரத்தையோடு செய்யும் செயலில் தான் நிறைவு இருக்கும்.* தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால் பேராசை தான் உண்டாகும். பெருமைக்காக ஆடம்பர பொருட்களை வாங்கக்கூடாது. * கோபத்தில் நியாயமானது என்றும் எதுவும் கிடையாது. கோபத்தால் நமக்கு நாமே தீங்கு செய்து கொள்கிறோம்.* மனதில் உள்ள அசுத்தங்களை எல்லாம் நீக்கிவிட்டால் மனம் தானாகவே கடவுளின் பக்கம் திரும்பி விடும்.* குடும்பத்தை மறந்து சமூகசேவையில் ஈடுபடுவது கூடாது. இரண்டையும் செய்வதே நல்லது.- காஞ்சிப்பெரியவர்