மகிழ்ச்சியுடன் இருங்கள்!
UPDATED : ஜூலை 31, 2014 | ADDED : ஜூலை 31, 2014
* மக்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை முன்னேற்ற வேண்டியது தலைவர்களின் கடமை. * நாம் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்க நம்மால் ஆனதைச் செய்வது அவசியம். * தவறான விஷயங்களில் ஈடுபடச் செய்வது பாவத்தின் சக்தி தான். அதிலிருந்து விழிப்புடன் காத்துக் கொள்ள முயல வேண்டும். * ஒவ்வொன்றையும் அளவறிந்து அந்தந்த நிலையில் நிறுத்தப் பழகுங்கள்* பணத்தில் மட்டுமல்ல பேச்சிலும் சிக்கனம் தேவை.- காஞ்சிப்பெரியவர்