மகிழ்ச்சியை வாரி வழங்கு
UPDATED : ஜூன் 21, 2015 | ADDED : ஜூன் 21, 2015
* கடவுளிடம் இருந்து பிரிந்து வந்துள்ள நாம், மீண்டும் அவரோடு ஒட்டிக் கொண்டு ஒன்றாகி விட முயல்வோம்.* இடைவிடாமல் மனம் எதை தீவிரமாக நினைக்கிறதோ, அதுவாக மாறி விடும்.* கடவுளை நினைத்தோ, நினைக்காமலோ செய்யும் எந்த செயலுக்கும் பலன் நிச்சயம் உண்டு.* தேவைகளை அதிகமாக்கிக் கொண்டே போவதால், வாழ்க்கையின் தரம் உயர்ந்து விடுவதில்லை.* போட்டி மனப்பான்மையால் நிம்மதி குறையும்.* எங்கிருந்தாலும், அங்கிருப்போருக்கு மகிழ்ச்சியை வாரி வழங்க முயற்சி செய்யுங்கள்.-காஞ்சிப்பெரியவர்