உள்ளூர் செய்திகள்

சகிப்புத்தன்மையை வளருங்கள்

* நம் உடல், அணிந்திருக்கும் ஆடை, குடியிருக்கும் வீடு ஆகியவை மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்.* வாக்கினால் (நம் இனிய பேச்சால்)புண்ணியம் செய்ய வேண்டும். அது நமக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் துன்பம் வராமல் துணைநிற்கும்.* பணம் நமக்கு எப்போதும் துணை நிற்காது. ஆனால், புண்ணியச் செயல்களால் செல்வத்தை 'தர்மம்' என்னும் நோட்டாக மாற்றிவிட்டால் எந்தக் காலத்திலும் துணைநிற்கும். * மனம் நமக்கு கட்டுப்பட்டு அடிமையாவதையே 'யோகம்' என்று குறிப்பிடுவர். அதைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் நம்மால் எவ்வளவோ விஷயங்களைச் சாதிக்க முடியும்.* அறிவியலால் நன்மை உண்டாவது போல, ஆபத்தும் அதிகமாகிக் கொண்டே போகிறது. பக்தியும், அமைதியுமே இந்த ஆபத்தை நீக்கும் மருந்து.* நம்மை ஒருவர் துன்புறுத்தும்போது அதை சகித்துக் கொண்டு அவரை மன்னிப்பது தான் பொறுமை. ஆனால், இதை கடைபிடிப்பது கஷ்டம். -காஞ்சிப்பெரியவர்