உள்ளூர் செய்திகள்

தர்மத்தை தாமதிக்காதீர்!

* கடவுள் இரு கைகளைக் கொடுத்திருக்கிறார். ஒரு கையால் ஈஸ்வரன் காலைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் கடமையைச் செய்யுங்கள்.* பணத்திற்காக அலைந்து கொண்டிருப்பவனுக்கு கடவுளைச் சிந்திப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.* ஒரு சிறுபுல்லைக் கூட நம்மால் சிருஷ்டிக்க முடியாது. ஆனால், கடவுள் பரந்த இந்த உலகத்தையே நமக்காகப் படைத்திருக்கிறார்.* எமன் மனிதனின் உயிரை எப்போதும் பறித்து விடலாம். அதனால், தர்மம் செய்வதில் கால தாமதம் கூடாது.* சேவை செய்ய விரும்புபவர்களுக்கு, மனதில் அமைதியும், இதழில் புன்னகையும் எப்போதும் அவசியம். காஞ்சிப்பெரியவர்