உள்ளூர் செய்திகள்

இன்றே தர்மம் செய்யுங்கள்

* ஒரு கையால் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னொரு கையால் உலகவாழ்வில் செயலாற்றுங்கள். * பணத்தைத் தேடி அலைந்து திரியாதீர்கள். கடவுளின் திருநாமத்தைச் சொல்லி வழிபடுவதே மேலான இன்பம்.* ஒரு சிறு புல்லைக் கூட படைக்கத் திறனற்றவராக இருக்கும் நமக்கும் உணவு, உடையும் கொடுத்த கடவுளுக்கு நன்றி காட்டுவது நம் கடமை.* தர்மம் செய்வதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி போடுவது கூடாது. வாழ்வு நிலையற்றது என்பதை மறத்தல் கூடாது.* மற்றவருக்கு உபதேசித்து திருத்துவதற்கு முன்னால், நம்மை நாமே தப்பு செய்யாமல் சரியான பாதையில் வாழக் கற்றுக் கொண்டால் போதும். * சேவை செய்பவர்களுக்கு தைரியம், மன ஊக்கம் இவற்றோடு மனதில் அமைதி, முக மலர்ச்சியும் தேவையான அடிப்படையான பண்புகள். - காஞ்சிப்பெரியவர்