யாரையும் எதிர்பார்க்காதே!
UPDATED : மார் 11, 2016 | ADDED : மார் 11, 2016
* உன் தேவைகளை நீயே பூர்த்தி செய்ய கற்றுக் கொள். யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதே.* மனிதன் முதலில் தன் குடும்பத்திற்கு தொண்டு செய்ய வேண்டும். அதன் பின் ஊராருக்குத் தொண்டு செய்யலாம்.* எல்லாரிடமும் அன்பு, பேச்சில் இனிமை இவையே தொண்டாற்றுவதற்குரிய அடிப்படை லட்சணம்.* சமூக சேவையும், கடவுள் பக்தியும் இணைந்து விட்டால் அகில உலகமும் நன்மை பெறும்.* ராமனுக்கு உதவிய அணில் போல தொண்டு சிறிதாக இருந்தாலும் போற்றுவதற்கு உரியதே.-காஞ்சிப் பெரியவர்