அன்னதானம் செய்யுங்க!
UPDATED : மே 07, 2014 | ADDED : மே 07, 2014
* அன்னதானத்திற்கு என்ன சிறப்பு என்றால், இதில் மட்டும் தான் ஒரு மனிதனை முழுமையாகத் திருப்திபடுத்த முடியும். * உயிரோடு உடம்பைக் காப்பது அன்னம். அதனால் தான் 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று சொல்கிறார்கள். * அம்பிகையே அன்னதானத்தின் மகிமையை நிலைநாட்டும் விதத்தில் காஞ்சிபுரத்தில் அன்னதானம் செய்தருளியிருக்கிறாள். * ஒருவன் தனக்காக மட்டும் உணவு தேடக் கூடாது என்பதை கீதையில் கிருஷ்ணர் உபதேசித்துள்ளார். - காஞ்சிப்பெரியவர்