உள்ளூர் செய்திகள்

கட்டிப்போடும் கடவுள்

* எவருக்கும், எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனதை அன்பு மயமாகச் செய்து கொள்வதே அகிம்சை.* புத்திப்பூர்வமாக ஒரு தவறைச் செய்தால் தான் அது பாவமாகிறது, புத்தி தங்கள் வசத்திலேயே இல்லாமல் சித்தப் பிரம்மம் பிடித்தவர்கள் செய்கிற எந்தச் செயலும் பாவம் இல்லை.* நம்முடைய துன்பத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டு பிறருக்கு நன்மை செய்யாமல் இருந்து விடக்கூடாது. நம்மால் உலகம் சிறிதளவாவது நலமாக இருப்பதற்காக பாடுபட வேண்டும்.* பலனை எதிர்பார்க்காமல் பொதுநலத்துடன் தர்மம் செய்ய வேண்டும்.* இயற்கையில் அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கிறது. சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகிறது. மலையும், சமுத்திரமும் கூட காலப்போக்கில் மாறுகின்றன என்பதால் உலக நடப்புகளை தெரிந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.* குழந்தை குறும்புத்தனம் செய்தால் வீட்டில் கட்டிப்போடுகிறோம். நம்மிடம் ஆசை என்ற குறும்புத்தனம் இருப்பதால் ஈஸ்வரன் நம்மை கட்டிப் போடுகிறான்.- காஞ்சிப்பெரியவர்