நல்ல நாள்
UPDATED : ஜன 25, 2013 | ADDED : ஜன 25, 2013
* காலையில் எழுந்ததும் இரு நிமிடமாவது கடவுளை மனப்பூர்வமாக நினைத்து வழிபாடு செய்யுங்கள்.* இன்றைய பொழுது நல்ல பொழுதாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.* வாரத்தில் ஒருநாளாவது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துங்கள். சாப்பிடும் முன், குறைந்த பட்சம் பறவைக்கோ அல்லது விலங்குக்கோ உணவு அளியுங்கள்.* தினமும் ஏழை எளியவர்க்கு தர்மச் செலவு செய்ய முயலுங்கள். அவரவர் சக்திகேற்ப இதனைச் செய்வது நல்லது.* இரவு தூங்குவதற்கு முன்பாக அன்றைய நாளில் செய்த நல்லவை, கெட்டவைகளை மனதிற்குள் அசைபோடுங்கள். * இரவில் இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை ஜெபித்து விட்டு தூங்கத் தொடங்குங்கள். * எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள். காரியம் ஆனாலும், ஆகாவிட்டாலும் மாறாமல் இருக்கும் அன்பே உண்மையான அன்பு. - காஞ்சிப்பெரியவர்