உள்ளூர் செய்திகள்

எல்லாம் அவன் செயல்

* கடவுளின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவன் ஒருவன் இருந்தால் கூட போதும். அவன் மூலமாகத் தேசம் நலம் பெறும். அப்போது எது வந்தாலும் பயமுமில்லை.* 'சிவ' என்ற இரண்டு அட்சரங்களை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூறிவந்தால், மனதுக்கு அமைதி கிடைக்கும்.* கடவுளின் கருணை நமக்குத் தெரியாது. நமக்கு நல்லது வந்தாலும், கெட்டது வந்தாலும் இரண்டுக்கும் மூலம் கடவுளின் அருள் தான் என்பதை உணரவேண்டும். எல்லாம் அவன் செயல்.* வாழ்க்கையில் எந்தவித குற்றமும் செய்யாதவன், எதற்கும் அஞ்ச வேண்டாம். தைரியம் அவன் முகத்தில் எப்போது பிரகாசமாக ஜொலிக்கும்.* அன்பு செலுத்தாமல் வாழ்ந்தால் அதில் ஆனந்தமில்லை. அன்பினால், பிறரை மாற்றுவது தான் நமக்குப் பெருமை.* ஜோதிர்லிங்கம் குளிர்ந்தால் உலகமெல்லாம் குளிரும். அதற்காகத் தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்கிறோம்.- காஞ்சிப்பெரியவர்