உள்ளூர் செய்திகள்

படிப்புடன் பக்தியும் வளரட்டும்

*குருகுல கல்வி முறையில் தெய்வ பக்திக்கும், குருபக்திக்கும் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது. * வீட்டில் பெற்றோருக்கும், பள்ளியில் ஆசிரியருக்கும் கட்டுப்பட்டு மரியாதையாக நடந்து கொள்வது பிள்ளைகளின் கடமை. இதையும்விட, இஷ்டதெய்வத்திடம் பக்தி செலுத்துவதும் அவசியம்.*மாணவர்கள் தினமும் படிப்புக்காக நேரத்தைச் செலவிடுவதோடு, கால்மணி, அரைமணி நேரமாவது பக்தியிலும் ஈடுபடுதல் நல்லது. * மாணவப் பருவத்தில் தெய்வ விஷயமாகக் கூட ரொம்பவும் போய்விடக் கூடாது என்று ஒருபக்கம் சொல்லும்போதே, இன்னொரு பக்கம் பக்தி இல்லாதவர்கள் மனதளவில் நல்ல வளர்ச்சி இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் மறக்கக்கூடாது.* சிறுவயதில் இருந்தே தெய்வசிந்தனையோடு ஒழுக்கம், தர்மம் போன்ற உயர்ந்த குணங்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மனிதப்பிறப்பே பயனற்றதாகி விடும்.- காஞ்சிப்பெரியவர்