மனம் குளிரட்டும்!
UPDATED : ஏப் 01, 2014 | ADDED : ஏப் 01, 2014
* உலகத்தில் நன்மை, தீமை இரண்டும் கலந்தே இருக்கிறது. நல்லதை மட்டும் நாடும் மனநிலையை பெற வேண்டும்.* நமக்கு நாமே மனதில் கட்டுதிட்டங்களை விதித்துக் கொண்டு அடக்கத்துடன் வாழ முயற்சிக்க வேண்டும்.* நல்ல புத்தியை வழங்கும்படி தினமும் கடவுளிடம் ஐந்து நிமிடமாவது பிரார்த்தனை செய்யுங்கள்.* வாழ்வில் நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்று சொல்வதே நாலு பேருக்கு உதவுவதற்காகத் தான்.* மற்றவர் மனம் குளிர நாம் நடந்தால், கடவுள் நம் மனம் குளிரும் விதத்தில் அருள்புரிவார்.- காஞ்சிப்பெரியவர்